Add Listing

About

About Kalayarkoil

காளையார்கோயில்

காளையார்கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.

இங்கு காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் எனும் பிரபலமான சிவன் கோவில் உள்ளது.

திருக்கானப்பேரூர் காளையார்கோவில், சோமநாதமங்கலம் (மறுபெயர்) சம்பந்தர் , சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இறைவன் காளை வடிவங்கொண்டு கையில் பொற்செண்டும் திருமுடியிற் சுழிதும்கொண்டு சுந்தரருக்குக்காட்சி தந்தார் என்பது தொன்நம்பிக்கை.

கோயிலின் இரட்டைக்கோபுரம், தெப்பக்குளம், வேதாந்தமடம், முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர் சமாதியும், பாண்டியன்கோட்டை மற்றும் மருது பாண்டியர் சமாதி இவ்வூரின் சிறப்பாகும்.

  • தாலுகா அலுவலகம்
  • யூனியன் அலுவலகம்
  • சார்பதிவாளர் அலுவலகம்
  • சார்நிலை கருவூலகம்
  • ஊட்டச்சத்து அலுவலகம்
  • தாலுகா மருத்துவமனை
  • தமிழ்நாடு மின்சார வாரியம்
  • காவல் நிலையம்
  • மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம், மத்திய அரசின் பஞ்சாலை
  • துணை அஞ்சலகம்

அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், எல்ஐசி அலுவலகம், தனியார் கல்லூரிகள் அமைந்துள்ளன.

உங்கள் தொழிலை/ நிறுவனத்தை காளையார்கோவில்.காம் உடன் பதிவு செய்திடுங்கள்

அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்றிடுங்கள். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வாயிலாக.

0
Close

Your cart